காதல் திருமணத்தை எதிர்த்த தாய்மாமா.. உணவில் விஷம் கலந்த கொடூரம்- பகீர் பின்னணி!
திருமண வரவேற்பு நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்ரா
மகாராஷ்ரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் உத்ரே கிராமத்தில் வசித்து வருபவர் மகேஷ் பாட்டீல். இவரின் சகோதரி மகள் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து வந்துள்ளார்.ஆரம்பத்தில் இவர்களது காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பிறகு சம்மதித்தனர் .
இந்த திருமணத்திற்குத் தாய்மாமன் மகேஷ் பாட்டீல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் எதிர்ப்பை மீறி திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் விழாவில் மணமகன் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விஷம்
அப்போது அவர்களுக்குப் பரிமாற எடுத்து வைத்திருந்த உணவில் தாய்மாமன் மகேஷ் பாட்டீல் விஷம் கலந்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் சிலர் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.மேலும் இந்த சம்பவத்தை அனைவரிடம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் விஷம் கலந்த உணவை அப்புறப்படுத்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மகேஷ் பாட்டீல் தப்பியோடிவிட்டதாகவும், அவரைத் தேடிக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.