மோடிக்கு தனது நண்பர்கள் குரல் தான் கேட்கும் : கொந்தளித்த ராகுல் காந்தி

Rahul Gandhi Narendra Modi
By Irumporai Jun 17, 2022 10:14 AM GMT
Report

ராணுவத்தில் இளைஞர்களை அதிகம் சேர்ப்பதற்கான முயற்சியாக அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தினை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

கலவரமாகும் அக்னிபாத்

ஆனால், அக்னிபத்திட்டம் இளைஞர்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதாக பிகார், மத்தியப் பிரதேசம், ஹரியானா உள்பட நாட்டின் பல பகுதிகளில் இந்த திட்டத்திற்கு எதிராக ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நண்பர்கள் குரல் தான் கேட்கும்

இந்த திட்டத்தின் கீழ் பணிக்குச் சேர வயது உச்சவரம்பு 21 என்பதால் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடும் கண்டணங்களை தெரிவித்து வருகிறது.

மோடிக்கு தனது நண்பர்கள் குரல் தான் கேட்கும் : கொந்தளித்த ராகுல் காந்தி | Agnipath Scheme Rahul Gandhi

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் :

அக்னிபாத்-இளைஞர்களால் நிராகரிப்பு விவசாய சட்டம்-விவசாயிகளால் நிராகரிப்பு பண மதிப் பிழப்பு-பொருளாதார நிபுணர்களால் நிராகரிப்பு ஜி.எஸ்.டி.-வர்த்தகர்களால் நிராகரிப்பு நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது பிரதமருக்கு புரியவில்லை.

ஏனென்றால் அவர் தனது நண்பர்களின் குரலை தவிர வேறு எதையும் கேட்பதில்லை" என்று பதிவிட்டுள்ளார். 

மன்னிக்க கற்றுக் கொடுத்தவர் எனது தந்தை: ராஜீவ்காந்தி தொடர்பில் ராகுல்காந்தி உருக்கம் (Video)