அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து மதுரையில் ரயில் நிலையம் முன்பு போராட்டம் - தள்ளுமுள்ளால் பதற்றம் - இளைஞர்கள் கைது

By Nandhini Jun 20, 2022 05:54 AM GMT
Report

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அக்னி பாத் திட்டம்

இந்திய ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னி பாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 6 மாத பயிற்சிக்குப் பின்னர் 4 ஆண்டுகள் மட்டுமே இவர்கள் ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் பணிக்காலம் முடிந்து தேர்வு செய்யப்படும் கடும் எதிர்ப்பு 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தர பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இளைஞர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வன்முறை வெடித்துள்ளது.

சென்னையில் போராட்டம்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அக்னி பாதை ராணுவ ஆள் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஆரணி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த இளைஞர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினார்கள்.

பாரத் பந்த்

இன்று பாரத் பந்த் நடத்தவும் பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து மதுரையில் ரயில் நிலையம் முன்பு போராட்டம் - தள்ளுமுள்ளால் பதற்றம் - இளைஞர்கள் கைது | Agneepath Aarmy Tamilnadu Struggle

மதுரை ரயில் நிலையம் முன்பு போராட்டம் 

இந்நிலையில், மதுரை ரயில்வே எதிரே சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 50 பேர் உட்பட 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்னி பாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் வரைக்கும் பேரணியாக திரண்டு வந்தார்கள்.

ரயில் நிலையத்தில் அவர்கள் போராட்டம் நடத்த முற்பட்டபோது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். தற்போது அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கிறது.