பாலியல் உறவுக்கான வயது வரம்பு 16 ஆக குறைப்பு - மத்திய அரசு சொல்வதென்ன..
பாலியல் உறவுக்கான வயது வரம்பு குறைப்பு குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
வயது வரம்பு குறைப்பு
பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவுக்கான வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆகக் குறைக்கலாம் என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளார்.
தொடர்ந்து இந்தப் பரிந்துரைக்கு மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி மூலம் எழுத்துப்பூர்வமான பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு விளக்கம்
அதில், "பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவுக்கான வயது வரம்பை நீர்த்துப்போகச் செய்வது, அல்லது 'இளம் பருவ காதல்' என்ற பெயரில் விதிவிலக்குகளை அனுமதிப்பது, சட்டப்படி நியாயமற்றது மட்டுமல்லாமல், ஆபத்தானதும் ஆகும்.
சீர்திருத்தம் என்ற பெயரிலோ அல்லது இளம் பருவத்தினரின் உடல் சார்ந்த காரணங்களுக்காகவோ எடுக்கப்படும் எந்த முடிவுகளும், போக்ஸோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா போன்ற
சட்டங்களின் மூலம் பல ஆண்டுகளாகக் கொண்டுவரப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பின் முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.