மீண்டும் சொல்கிறேன்.. நான் ஒரு கிறிஸ்துவந்தான் ஆனால்.. துனை முதல்வர் உதயநிதி!

Udhayanidhi Stalin Tamil nadu Coimbatore
By Swetha Dec 19, 2024 02:15 AM GMT
Report

நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைகொள்கிறேன் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

உதயநிதி

கோயம்பத்தூர் பெத்தேல் மாநகரப் பேராலயத்தில், எஸ்.பி.சி., பெந்தெகொஸ்தே சபைகளின் சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் துணை முதல்வர் உதயநிதி பங்குபெற்று சிறப்புரையாற்றினார்.

மீண்டும் சொல்கிறேன்.. நான் ஒரு கிறிஸ்துவந்தான் ஆனால்.. துனை முதல்வர் உதயநிதி! | Again Saying Im A Christian Says Udhayanidhi

அப்போது மேடையில் பேசிய அவர், ஒட்டுமொத்த உலகையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விழா என்றால், அது நம்முடைய கிறிஸ்துமஸ் விழா மட்டும் தான். கிறிஸ்துமஸ் வந்தால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

என்னமா நீங்க கட்டுறீங்க.. மணப்பெண் கழுத்தில் தாலி கட்டிய தாயார் - ஷாக்கான உதயநிதி!

என்னமா நீங்க கட்டுறீங்க.. மணப்பெண் கழுத்தில் தாலி கட்டிய தாயார் - ஷாக்கான உதயநிதி!

கிறிஸ்துவந்தான்..

உங்களுக்கு தெரியும், நான் படிச்சது டான் பாஸ்கோ பள்ளியில், மேல்படிப்பு படிச்சது லயோலா கல்லூரியில். சென்ற ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, 'நானும் ஒரு கிறிஸ்டியன் தான்' என்று பெருமையாக சொன்னேன்.

மீண்டும் சொல்கிறேன்.. நான் ஒரு கிறிஸ்துவந்தான் ஆனால்.. துனை முதல்வர் உதயநிதி! | Again Saying Im A Christian Says Udhayanidhi

உடனே பல சங்கிகளுக்கு வயிற்று எரிச்சல். இன்னைக்கு மீண்டும் உங்க முன்னாடி சொல்றேன், நான் ஒரு கிறிஸ்டியன் என்று சொல்வதில் பெருமையடைகிறேன். 'நீங்க என்ன கிறிஸ்தவனு நினைச்சா கிறிஸ்தவன்,

முஸ்லீம்னு நினைச்சா முஸ்லீம் , இந்துனு நினைச்சா இந்து; நான் எல்லாருக்கும் பொதுவானவன் தான். எல்லா மதங்களின் அடிப்படையே அன்பு தான். எல்லோர் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்று தான் எல்லா மதங்களும் சொல்கின்றன் என்று தெரிவித்துள்ளார்.