என்னமா நீங்க கட்டுறீங்க.. மணப்பெண் கழுத்தில் தாலி கட்டிய தாயார் - ஷாக்கான உதயநிதி!
மணமகனுக்குப் பதில் அவரது தாயே மணமகளுக்குத் தாலி கட்ட முயன்ற சம்பவம் சிரிப்பலைக்களை எழுப்பியுள்ளது.
உதயநிதி
சென்னை, ஆர்.கே. நகரில் உதயநிதி ஸ்டாலினின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் 'எளியோர் எழுச்சி நாள்' என்ற பெயரில் 48 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அந்த திருமணத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
இதில் மணமக்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மொய், கட்டில், மெத்தை, பீரோ மற்றும் மிக்சி என 30 வகையான பொருட்கள் அடங்கிய சீர் வரிசைகள் வழங்கப்பட்டது. அங்குள்ள மண்மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுத்து வந்தார்.
தாயார்..
அப்போது சூர்யகுமார் - குணவதி மணமக்களுக்கு தாலி எடுத்து கொடுத்தார், அச்சமயத்தில் திருமண பரபரப்பில் இருந்த மணமகளின் தாயார் துணை முதலமைச்சரிடம் இருந்து தாலி பெற்றுக்கொண்டு மணமகனுக்குப் பதில் அவரது தாயே மணமகளுக்குத் தாலி கட்ட முயன்றார்.
அதை பார்த்த உதயநிதி ஸ்டாலின், மணமகளின் தாயாரை நோக்கி, “என்னமா, நீங்க தாலி கட்டுறீங்க” எனக் கேட்டு மெய் மறந்து சிரித்தார். இதனால் அப்பகுதியில் சிறு நேரம் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
“திருமண பதற்றத்தில் இருந்த ஒரு சில மணமகன்கள் தனக்குதானே மாலை போட்டுக் கொள்கிறார்கள். ஒரு மணமகன் தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டு முயற்சி செய்தார். இது தவறில்லை பெண்கள் தான் தாலி கட்ட வேண்டும் என்று அவசியமில்லை” என்று கலகலப்பாக பேசியிருந்தார்.