சவுக்கு சங்கரை விடாமல் துரத்தும் தமிழக அரசு? மீண்டும் பாய்ந்த குண்டர் சட்டம் - என்ன பின்னணி?
சவுக்கு சங்கர் மீது காவல் துறையினர் மீண்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
துரத்தும் அரசு?
பிரபல யூட்யூபர் சங்கர் என்ற சவுக்கு சங்கர் சவுக்கு மீடியாவை நடத்திவந்தார். முன்னதாக யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காவல் துறை அதிகாரி மற்றும் பெண் போலீஸ் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அவர் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் தேனியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோவை உள்ளிட்ட 16 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் தொடர்ந்ததைத் தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டம்
ஆனால் குண்ட சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், தற்போது தேனியில் கஞ்சா வைத்திருந்த விவகாரத்தில் சவுக்கு சங்கர் மீது காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தேனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான காவல் துறையினர் கஞ்சா வைத்திருந்த விவகாரத்தில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.