திருமணமான பின் பிறந்த வீட்டுடன் உறவு இல்லையா? - நீதிமன்றம் அதிரடி!
பெண்கள் திருமணம் ஆன பின் பிறந்து வீட்டின் உறவு பற்றி நீதிமன்றம் கூறியுள்ளது.
திருமணம்
கடலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கிராம பஞ்சாயத்து செயலாளர் பதவிக்கு, அந்த கிராமத்தில் அருந்ததியர் தெருவை சேர்ந்த ஜி.மாயக்கண்ணன், பி.சரண்யா ஆகியோர் விண்ணப்பம் செய்தனர். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையில் அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்ற வட்டார வளர்ச்சி அலுவலர், சரண்யாவை கிராம பஞ்சாயத்து செயலாளராக நியமித்து 2019ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த பெண் திருமணமாகி நெய்வேலியில் உள்ளார், அதனால் இவரை அந்த பதவியில் ரத்து செய்து தன்னை செயலாளராக நியமிக்க உத்தரவிடக் கோரி மாயக்கண்ணன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிமன்றம்
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, சரண்யாவின் மனுவை தள்ளுபடி செய்து, பஞ்சாயத்து செயலாளர் என்பவர் அவசர பணிக்காக உடனடியாக வருவதை உறுதி செய்வதற்காகவும், உள்ளூர் நிலவரங்கள், தேவைகள், பிரச்சனைகளை தெரிந்திருப்பார் என்பதால் தான் உள்ளூரை சேர்ந்தவர் என குடியிருப்பு சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டுமென நிர்பந்திக்கப்படுவதாகவும் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நீதிபதி, மணமான பெண் கணவர் வீட்டில் வசிப்பதுதான் வழக்கம் என்பதாலும், கணவர் குடும்பத்தின் குடும்ப அட்டையில் சேர்ப்பதற்காக பெற்றோரின் குடும்ப அட்டையிலிருந்து பெண்ணின் பெயர் நீக்கப்படுகிறது என்பதாலும், அதன்பின்னர் பிறந்த வீட்டுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டார் என கூற முடியாது என தெளிவுபடுத்தி உள்ளார்.