பிறந்த பெண்குழந்தை - பாத்ரூமிலேயே மனைவியை சித்ரவதை செய்த கொடூர கணவன்!
பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை பாத்ரூமில் அடைத்து வைத்து கணவன் சித்ரவதை செய்துள்ளார்.
ஆண் வாரிசு
ஆந்திரா, சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சானு. இவரது மனைவி சபீஹா. 6 ஆண்டுகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அது கணவனுக்கு பிடிக்கவில்லை.
ஆண் வாரிசு வேண்டும் என்ற வெறியில் மனைவியை சித்ரவதை செய்து வந்துள்ளார். பின் சபீஹா மீண்டும் கர்ப்பமான நிலையில் இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்துள்ளது.
கணவன் கொடூரம்
அதனால், மனைவியை வீட்டு பாத்ரூமிற்குள் அடைத்து வைத்து சாப்பாடு, தண்ணீர் கூட கொடுக்காமல் வெளியே விடாமல் கொடுமைப்படுத்தியுள்ளார். பாத்ரூம் தண்ணீரை குடித்து தான் தனது உயிரை காப்பாற்றி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பெண்ணின் வீட்டாருக்கு சந்தேகம் வரவே போலீஸாருடன் சென்று அவரை மீட்டுள்ளனர். தொடர்ந்து புகாரின் பேரில், கணவர் சானு கைது செய்யப்பட்டார்.