பெண் என்றாலே தெறித்து ஓடும் வினோதம் - ஒளிந்து வாழும் முரட்டு சிங்கிள் முதியவர்!
முதியவர் ஒருவர் பெண்களை கண்டு அஞ்சி வாழ்ந்து வருகிறாராம்..
ஆல்வேஸ் சிங்கிள்
ஆப்பிரிக்காவில் வசித்து வருபவர் கலிக்ஸ்டே நஸம்விதா(71). இவர் பல வருடங்களாக மக்களுடன் பெரிதாக பழகாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்.
மேலும், இளம் வயதில் இருந்தே பெண்களை பார்த்தாலே பயம் ஏற்படும் மனநோய் இருந்து வருகிறது. எனவே, பெண்கள் அருகில் கூட செல்லாமல் வாழ்ந்து வருகிறார். அவர்களோடு அதிகம் பேசாமல், கட்டாய சூழ்நிலையில் மட்டும் பேசுவாராம்..
விசித்திர மனிதன்
இவ்வாறு 55 வருடங்களாக தனியாகவே வசித்து வருகிறார். ஏதேனும் பொருட்களை பெண்கள் விற்பனை செய்தால் கூட அதனை தூக்கி எரியும்படி அவர்களிடம் கூறிவிடுவார் எனக் கூறுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த நெட்டிசன்கள் ஆச்சரியமாக இந்த விசித்திர மனிதனை பார்த்து வருகின்றனர்.