எப்புட்றா...? 60 ஆண்டுகளாக தூங்காமல் வாழும் 90வயது நபர்; உடல் நலக் குறைவே ஏற்படாத விசித்திரம்!

Vietnam World
By Jiyath Aug 03, 2023 07:04 PM GMT
Report

60 ஆண்டுகளாக தூங்காமல் இருக்கும் வியட்நாமைச் சேர்ந்த விசித்திர மனிதன் குறித்த தகவல்.

தூக்கம்

மனித வாழ்க்கையில் தூக்கம் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். தேவையான அளவு உறங்கவில்லை என்றால் உடல் நலக் குறைவு, சோர்வு போன்ற நோய்களை ஏற்படுத்தும். தூக்கமின்மை மன நிலையையும் பாதிக்கும். ஆனால் வியட்நாமைச் சேர்ந்த 80 வயதுடைய நபர் ஒருவர் 80 ஆண்டுகளாக தூங்காமலேயே வாழ்ந்து வருகிறார்.

60 ஆண்டுகளாக தூங்காத மனிதன்

80 வயதான தாய் ங்காக் (Thai Ngoc) வியட்நாம் நாட்டில் வசித்து வருகிறார். கடந்த 1962ம் ஆண்டு ஒரு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாய் ங்காக் அதற்கு பிறகு தூங்கியதே இல்லை என சொல்லப்படுகிறது. அவரது நண்பர்களும்,உறவினர்களும் தாய் ங்காக் தூங்கி நாங்கள் பார்த்ததே இல்லை என்று கூறுகிறார்கள்.

எப்புட்றா...? 60 ஆண்டுகளாக தூங்காமல் வாழும் 90வயது நபர்; உடல் நலக் குறைவே ஏற்படாத விசித்திரம்! | Thai Ngoc Who Never Slept In Last 60 Years Ibc

இதைப்பற்றி அறிந்த சில மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போதும் எதனால் இவர் இப்படி தூங்காமல் இருக்கிறார் என கண்டறிய முடியாமல் குழம்பி போயுள்ளனர். நிரந்தர தூக்கமின்மையால் அதவாது (Permanent Insomnia) ஆல் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது பொது கருத்தாக சொல்லப்படுகிறது. பொதுவாக மனிதன் தேவையான அளவிற்கு தூங்காமலிருந்தாலே பல நோய்களும்,சோர்வும் உடல்நலக் குறைவும் வந்துவிடும் ஆனால் 60 வருடங்களாக தூங்காமல் இருக்கும் தாய் ங்காக் இதுவரை எந்த உடல் நலக் குறைவாலும் பாதிக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

எப்புட்றா...? 60 ஆண்டுகளாக தூங்காமல் வாழும் 90வயது நபர்; உடல் நலக் குறைவே ஏற்படாத விசித்திரம்! | Thai Ngoc Who Never Slept In Last 60 Years Ibc

பிரபல யூடியூப் சானெல் ஒன்று இவரின் இந்த நிலை குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டது. அந்த வீடியோவில் இந்த நிலைக்கு PTSD (Post-traumatic stress disorder) காரணமாக இருக்கலாம் என கருதுகிறார்கள். சிலர் இது அரியவகை மருத்துவ நிலை என்றும் கருதுகிறார்கள். அன்றாடம் க்ரீன் டீ மற்றும் ரைஸ் ஒயின் பருகும் பழக்கம் கொண்டிருக்கிறார் தாய் ங்காக் என்றும் அந்த யூடியூப் வீடியோ மூலம் அறியப்படுகிறது.