ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதல்: 19 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுகொலை!
ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 19 தலீபான் பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் நங்கார்ஹர் மற்றும் லோகர் ஆகிய இரு மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகள் மீது அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த தாக்குதலில் நங்கார்ஹரில் ஹிசாரக் மற்றும் ஷேர்ஜாத் ஆகிய மாவட்டங்களில் நேற்று மதியம் 11 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டார்கள். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். லோகர் மாகாணத்தில் நடந்த வான்வழி தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இவர்கள் நில கண்ணி வெடிகளையும், சாலையோர குண்டுகளையும் நிறுவும் பணியில் ஈடுபட்டனர் என ராணுவம் தகவல் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் சேர்த்து மொத்தம் 19 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.