ஆப்கானிஸ்தானில் குண்டு வீசிய பாகிஸ்தான்.. போருக்கு தயாரான தாலிபான்கள் - நடந்தது என்ன?
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தாலிபான் படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தாலிபான் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்களைப் பாகிஸ்தான் தாலிபான் படைகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்து அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது வழக்கம்.
அதுமட்டுமில்லாமல் இந்த அமைப்புக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.இந்த அமைப்பின் முக்கிய நோக்கம், பாகிஸ்தானில் தாலிபான் ஆட்சி செய்ய வேண்டும் என்பது தான்.மேலும் தற்பொழுது நடந்து வரும் அரசாங்க ஆட்சியைத் தூக்கி எறிவதாகும்.
குறிப்பாகப் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இரண்டு நாடுகளில் தாலிபான் ஆட்சியை அமைத்து இரண்டு நாடுகளை ஒன்றாக்குவதே இவர்களின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பின் தளவாடும் இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
தாலிபான் படைகள்
அதன் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இதற்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் மிருகத்தனமான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்து இருந்தது. இதன் காரணமாகப் பாகிஸ்தான் எல்லையில் தாலிபான் படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.