3-ம் வகுப்பிற்கு மேல் பெண்கள் படிக்கக்கூடாது - தடை விதித்த அரசு!

Afghanistan Taliban
By Vinothini Aug 08, 2023 07:55 AM GMT
Report

பெண்கள் படிப்பிற்கு அரசு தடை விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு கட்டுப்பாடுகள்

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். கடந்த இரண்டு வருடங்களாக தலிபான்கள் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

afghanistan-new-rules-against-school-girls

பெண்கள் உயர் கல்வி கற்பதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும், அழகு நிலையம் நடத்தக்கூடாது, வெளியில் காரில் பெண்கள் பயணம் செய்யும் போது ஆண் துணையுடன் தான் செல்ல வேண்டும் என பல்வேறு விதிகளை விதித்து வருகின்றனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த போதிலும் அதை தலிபான்கள் அதனை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.

படிப்பிற்கு தடை

இந்நிலையில், தற்பொழுது பெண் குழந்தைகள் மூன்றாம் வகுப்புக்கு அப்பால் கல்வி கற்கவும் தலிபான்கள் புதிய தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கு தலிபான் அரசின் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், மூன்றாம் வகுப்புக்கு மேலான பெண் குழந்தைகளை, நிரந்தமாக வீட்டுக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

afghanistan-new-rules-against-school-girls

தொடர்ந்து, 6-ம் வகுப்பு பயின்ற மாணவி பள்ளிக்கு வந்த பொழுது அவரை உள்ளே விடாமல் வெளியே அனுப்பிவிட்டனர். பெண்களுக்கு எதிராக இவர்கள் கொண்டுவரும் கட்டுப்பாடுகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது. மேலும், ஒரு மனிதருக்கு கல்வி ஒன்றே அவரின் முன்னேற்றத்திற்கான வழி இதனை தடுத்து தலிபான்கள் நாட்டை பின்நோக்கி இழுத்து செல்கின்றனர்.