பொறுத்தது போதும் - ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவாக திரண்ட ஆண்கள்!
மாணவிகளின் கல்வி உரிமைக்காக மாணவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
பெண் கல்வி மறுப்பு
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து, அங்கு படிப்படியாக பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் அங்கு உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்கத் தடை விதிக்கப்பட்டது.

பெண்கள் பயிலும் கல்லூரிகளை மூடவும் உத்தரவிடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், தலைநகர் காபூல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், பெண்களின் போராட்டத்திற்கு மாணவர்களும் ஆதரவாக போராட்டத்தில் குதித்து வகுப்புகளைப் புறக்கணித்துள்ளனர்.
கைகோர்த்த மாணவர்கள்
மேலும், மீண்டும் கல்லூரிகளில் பெண்கள் அனுமதிக்கப்படும் வரை தாங்கள் வகுப்புகளுக்குள் செல்ல மாட்டோம் என கூறியுள்ளனர். இதனால் அங்கு பல்கலைக்கழகங்களை மூடும் நிலை உருவாகியுள்ளது.
மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உயர்நிலைக் குழுக்களை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.