பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பார்க்க கூடாது - தொடரும் கொடுமை!

Afghanistan Taliban
By Sumathi Jan 12, 2023 05:07 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை ஆப்கனை தாலிபான்கள் ஆட்சி செய்த நிலையில், தற்போது 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளனர். அங்கு பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதிக்கும் நடைமுறைய வழக்கமாக கொண்டுள்ளனர்.

பெண்கள் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பார்க்க கூடாது - தொடரும் கொடுமை! | Afghanistan Bans Women Seeing Male Doctors

அதன் அடிப்படையில், விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்ல கூடாது. மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது. மேலும் ட்ரைவிங் லைசன்ஸ் வழங்கவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தலை முதல் கால் வரை முழுவதுமாக மறையும் வகையிலான புர்கா அணிய உத்தரவிட்டுள்ளனர்.

பெண்கள் அவதி

மேலும், பெண்கள் உடற்பயிற்சி கூடமான ஜிம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்லவும், ‛ஹம்மம்' எனும் பொது குளியல் மையம் செல்லவும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "பெண்கள் இனி ஆண் டாக்டர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் தங்களின் நோய்களுக்கு பெண் டாக்டர்களிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும்.

மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு ஆஸ்பத்திரியும் இதனை கண்காணிக்க வேண்டும்" என உத்தரவிடப்பட்டுள்ளது.