தொடரும் கொடுமை.. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு!
பெண்களுக்கு பல்கலைக்கழக நுழைவுத் தேர்தலில் தாலிபான்கள் அனுமதி மறுத்துள்ளனர்.
பெண்களுக்கு தடை
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான நடவடிக்கையில் தாலிபான்கள் அரசு ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க படை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய நிலையில் அந்நாட்டை கைப்பற்றிய தாலிபான்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாலிபான்கள் பெண்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளில் மேற்கொண்டு வரும் நிலையில் அந்நாட்டில் பெண்கள் போராட்டங்களை நடத்தி வருகி்னறனர். தொடர்ந்து, பல்கலை கழகங்களில் பெண்கள் கல்வி பயில தாலிபான்கள் அரசு தடை விதித்து உத்தரவிட்டது.
புதிய உத்தரவு
ஏற்கனவே பெண்கள் பள்ளியில் 6ஆம் வகுப்பிற்கு மேல் கல்வி பயில தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வுகளில் பெண்களை அனுமதிக்க கூடாது எனவும்,
பல்கலைக்கழகங்கள் இந்த ஆணையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil