4 பேரின் கைகளை கொடூரமாக வெட்டிய தாலிபான்கள் - அதிர்ச்சி பின்னணி!
4 பேரின் கைகள் கொடூரமான முறையில் துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டு
அமெரிக்க படை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய நிலையில் அந்நாட்டை கைப்பற்றிய தாலிபான்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் புர்கா அணிய வேண்டும்.

பூங்கா, ஜிம் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்லக்கூடாது, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களிலும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தாலிபான்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை.
கொடூரம்
மேலும்,குற்றம் செய்தவர்களுக்கு பொதுவெளியில் கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை அளிக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கந்தஹாரில் உள்ள அகமது ஷாஹி மைதானத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர்.
தாலிபான் அதிகாரிகளும் அங்கு குவிந்திருந்தனர். இந்த வேளையில் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் 4 பேரின் கைகளை அவர்கள் வெட்டி துண்டித்தனர். இதுதொடர்பான படங்கள் இணையதளங்களி்ல வெளியாகிய நிலையில் மனித உரிமைகள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.