பிரபல பாடகி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை - அதிர்ச்சி சம்பவம்!

Pakistan Afghanistan
By Vinothini Jul 19, 2023 07:21 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானின் பிரபல பாடகி பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாடகி

ஆப்கானிஸ்தானின் பிரபல பாடகியான ஹசிபா நூரி. இவர் 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் இருந்து தப்பி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்து இருந்தார்.

afghan-singer-hasiba-noori-killed

இவருக்கு 38 வயதான நிலையில் நேற்று பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள குசாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொலை

இந்நிலையில், நூரியின் நண்பரான கோஸ்போ அஹ்மதி, அவர் இறந்த செய்தியை ஒரு சமூக ஊடக இடுகையில் உறுதிப்படுத்தியுள்ளார். ஹசிபா நூரியின் மரணம் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் எதிர்கொள்ளும் கடுமையான ஆபத்தை உணர்த்துகிறது.

afghan-singer-hasiba-noori-killed

சுமார் 14 லட்சம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் மற்றும் எண்ணற்ற ஆவணமற்ற அகதிகள் பாகிஸ்தானில் குடியேறி உள்ளனர்.