வரலாற்று சாதனை படைத்த ஆப்கான் அணி; வீதிகளில் திரண்டு மக்கள் கொண்டாட்டம் - viral video !
ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
ஆப்கான் அணி
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.இரு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கியது.முதலில் விளையாடிய ஆஃப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.
இதனை சேஸ் செய்த வங்கதேசம், 12.1 ஓவர்களில் இலக்கை எட்டினால் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு இருந்தது. எனினும் ஆட்டம் அவ்வப்போது மழையால் பேட்ஸ்மேன்களுக்கு கடினமானது. ஆட்டத்தில் ஒவ்வொரு ரன்களுக்கும் பந்துகள் சம அளவில் இருந்ததால் போட்டியில் விறுவிறுப்பு கூடியது.
மக்கள் கொண்டாட்டம்
இறுதியாக 7 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முஸ்தபிசூர் பேட்டிங் செய்ய, நவீன் உல் ஹக் பந்து வீசினார். அப்போது பந்து பேடில் பட்டு செல்ல நவீன் உல் ஹக் எல்பிடபுள்யூவிற்கு அப்பீல் செய்தார். அம்பயர் அவுட் கொடுக்கவே ஆஃப்கானிஸ்தான் டக் வொர்த் லூவிஸ் (DLS) முறையில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது. இந்த வெற்றியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியதை கண்ட அந்த நாட்டு ரசிகர்கள் நடனமாடி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
அங்குள்ள நங்க்ரஹர் என்ற இடத்தில் தெரு முழுவதும் மக்கள் கூட்டம் அலை கடல் போல் திரண்டு வந்த இந்த வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The streets of Nangarhar in Afghanistan... ??? pic.twitter.com/2Y95WXqyJU
— Squeeze (@iTheBeliver) June 25, 2024