திசையெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்; உலுக்கிய நிலநடுக்கம் - 12 கிராமமே அழிஞ்சுடுச்சு!

Afghanistan Earthquake
By Sumathi Oct 08, 2023 09:43 AM GMT
Report

நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானின் எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு நகரமான ஹெராட்டில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

திசையெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்; உலுக்கிய நிலநடுக்கம் - 12 கிராமமே அழிஞ்சுடுச்சு! | Afganistan Earthquake 2000 People Dead

இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள் நிகழ்ந்தது. இதனால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து சேதமாகின.

2000 பேர் பலி

இந்நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1000 கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

திசையெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்; உலுக்கிய நிலநடுக்கம் - 12 கிராமமே அழிஞ்சுடுச்சு! | Afganistan Earthquake 2000 People Dead

மேலும், ஜிந்தா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று 2-வது நாளாக மீட்புபணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மனதை ரணமாக்கும் கோர காட்சிகள் - துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்வு

மனதை ரணமாக்கும் கோர காட்சிகள் - துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்வு

அப்போது சடலங்கள் குவிந்த வண்ணம் காணப்பட்டுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஆட்சி நடத்தி வரும் தலிபான்கள் கவலை தெரிவித்துள்ளனர்.