மனதை ரணமாக்கும் கோர காட்சிகள் - துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்வு
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஒரே இரவில் நிலைகுலைந்த நாடு கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாக கொண்டு திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் துருக்கி மற்றும் சிரியா நிலைகுலைந்தது.
அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நகரில் இருந்த ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதிகாலை நிகழ்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி இரவு பகலாக தொடர்ந்து வருகிறது. மீட்பு பணிகளில் இந்தியாவில் இருந்து சென்ற மீட்பு படையினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்களை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர் மீட்பு படையினர்.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை என்பது 28 ஆயிரத்தை கடந்துள்ளது.