திருமணமான பெண்னுடன் உறவு வைத்து ஏமாற்றினால் தப்பில்லை - நீதிமன்றம்
திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றமாகாது என கர்நாடக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தகாத உறவு
பெங்களூரைச் சேர்ந்தவர் பிரஜித்(28). இவருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் மீறிய தகாத உறவில் இருந்துள்ளனர். மேலும், திருமணம் செய்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், திடீரென பிரஜித்துக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து, அந்தப் பெண்ணுடன் உறவை துண்டித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு
அதனையடுத்து வழக்கை ரத்து செய்யக்கோரி பிரஜித் உயர்நீதிமன்றத்துல் மனு அளித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, புகார் கொடுத்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
கணவரை அவர் விவாகரத்து செய்யவில்லை. விவாகரத்து செய்யாமல், இன்னொரு நபரை திருமணம் செய்ய நினைக்கும் பெண்ணை ஏமாற்றுவது குற்றம் ஆகாது. இதனால், மனுதாரர் மீது பதிவான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டார்.