தாயுடன் தகாத உறவு - நபரை கொடூரமாக வெட்டிய அப்பா, மகன்!
தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை தந்தையும், மகனும் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
ராஜபாளையம், சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ரமேஷ் குமாரி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கனகராஜின் மனைவி அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவருடன் கடந்த 2 வருடமாக தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த கணவன் அன்பழகனை பலமுறை அழைத்து கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் உறவை தொடர்ந்துள்ளார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில், ரமேஷ்குமாரி அவருடைய தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
வெட்டிக் கொலை
இந்நிலையில் சம்பவத்தன்று கனகராஜின் வீட்டிற்கு அருகேயுள்ள தன்னுடைய உறவினரின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அன்பழகனை, மகனுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளார்.
அதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
தகவல் அடிப்படையில், சம்பவ இடம் விரைந்து வந்த போலீஸார் தந்தை, மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.