கணவரை பிரிந்த பெண்.. கொன்று மூட்டையில் கட்டி வீச்சு - கள்ளக்காதலன் வெறிச்செயல்!
பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூட்டையில் பெண்..
புதுச்சேரி, கோவில் வீதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி இளவரசி(38). இந்த இருவருக்கும் கோபிநாதன்(19) என்ற மகனும், பிரியா(16) என்ற மகளும் உள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்து கணவரான புருஷோத்தமனை பிரிந்து இளவரசி, மகன், மகளுடன் வடுவகுப்பத்தில் தனியாக வசித்து வந்தார்.
இதில் இளவரசி புதுச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார். அப்போது இளவரசிக்கும், அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன டிரைவரான ராஜூ என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டாக இளவரசி வீட்டுக்கு ராஜூ வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 4ம் தேதி ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு இளவரசி மகன், மகளுடன் சென்றார். பிறகு குழந்தைகளை அங்கேயே விட்டு விட்டு இளவரசி மட்டும் புதுச்சேரிக்கு திரும்பினார். பின்னர் வழக்கம் போல வேலைக்கு சென்று வந்தார்.
இதனிடையே கடந்த 9ம் தேதி வேலைக்கு சென்ற இளவரசியை காணவில்லை. தகவலறிந்த தாயை தேடி மகன், மகள் வந்தனர். உறவினர் வீடுகளில் தேடியும் இளவரசி கிடைக்கவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தார்.
கள்ளக்காதலன்
இந்த நிலையில் திருவக்கரையில் உள்ள முட்புதரில் சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் பிணம் ஒன்று கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் வானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று சாக்கு மூட்டையில் இருந்த பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது பிணமாக மீட்கப்பட்டது மாயமான இளவரசி என தெரியவந்தது. இளவரசியை அடித்து கொன்று சாக்கு மூட்டையில் கட்டி பிணமாக வீசியுள்ளதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் ராஜூவிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது, கடந்த 9ம் தேதி இளவரசி வீட்டுக்கு ராஜூ வந்துள்ளார். சாப்பாடு தயார் செய்யாததால் ராஜூவுக்கும், இளவரசிக்கும் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த ராஜூ அவரை தாக்கியுள்ளார். இதில் இளவரசி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து ராஜூ, இளவரசியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி முட்புதரில் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து இவ்வழக்கு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.