பெண் நீதிபதியை துரத்தி.. துரத்தி.. காதல் டார்ச்சர் - வழக்கறிஞர் மீது கடும் நடவடிக்கை!
வழக்கறிஞர் ஒருவர் பெண் நீதிபதிக்கு காதல் டார்ச்சர் தந்து வந்தது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
காதல் டார்ச்சர்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேண் நீதிபதி. இவரை வழக்கறிஞர் சிவராஜ் என்பவர் காதலிப்பதாக கூறி நெடுநாளாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதாவது அந்த பெண் நீதிபதி எந்த நீதிமன்றத்தில்,
தினமும் வேலை செய்கிறாரோ அங்கு சென்று அவரை தொடர்ந்து விடாமல் பார்த்துக்கொண்டிருக்கும் வழக்கத்தை வைத்துள்ளார். அவ்வப்போது பெண் நீதிபதியின் நடவடிக்கைகளிலும் குறுக்கிடும் போக்கைக் காட்டியுள்ளார்.
பெண் நீதிபதி
பெண் நீதிபதி தனிப்பட்ட முறையில் கோவில் போன்ற பொது இடங்களுக்கு சென்றபோதும் அவர் அங்கு பின் தொடர்ந்து சென்று காதல் தொல்லையை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், தொடர்ச்சியாக இப்படி அவர் செய்து வந்ததை உணர்ந்த பெண் நீதிபதி உயர்நீதிமன்ற நீதிபதியிடம் புகார் இது தொடர்பாக புகார் அளித்தார்.
அதையடுத்து, வழக்கறிஞர் சிவராஜிற்கு தனிப்பட்ட முறையில் அழைத்து அறிவுரை கூறியும் திருந்தாமல் அவர் தனது செயல்களை நிறுத்தவில்லை என தெரியவந்தது. இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை சிவராஜ் நீதிமன்றங்களில் ஆஜராக தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.