குடோனுக்குள்.. மினி ஃபேக்டரி - 35 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்!
35 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் குடோன்
தூத்துக்குடி, மடத்தூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் குடோனில் கலப்பட டீசல் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில்,
உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த குடோனுக்கு விரைந்து சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 35 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கலப்பட டீசல்
மேலும் கலப்பட டீசல் கடத்தலுக்கு பயன்படுத்திய டேங்கர் லாரி மற்றும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.80 லட்சம். இதுதொடர்பாக தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன்(27),
தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த பவுல் அந்தோணி (35), நாங்குநேரியைச் சேர்ந்த ராஜகோபால் (42), மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்த ராமசாமி (30), வேலூர், குடியாத்தத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் புஷ்பராஜ் (27),
6 பேர் கைது
குரூஸ்புரத்தைச் சேர்ந்த டேனியல் (44) தூத்துக்குடி மாநகராட்சியின் 24 வது வார்டு தி.மு.க பெண் கவுன்சிலர் மெட்டில்டாவின் கணவர் என்பது குறிப்பிடதக்கது. ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான வேலுவை (32) வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இதுகுறித்து தூத்துக்குடி உதவி ஆய்வாளர் சந்தீஸ் கூறியதாவது, பெங்களூருவில் இருந்து 20 ஆயிரம் லிட்டர் டீசலை எவ்வித ஆவணங்களும் இன்றி திருட்டுத்தனமாக டேங்கர் லாரியில் தூத்துக்குடி குடோனுக்கு கொண்டு வந்துள்ளனர்.
35 ஆயிரம் லிட்டர் பறிமுதல்
பின்னர் அந்த டீசலுடன் மண்எண்ணெய் உள்ளிட்டவற்றை கலந்து கலப்பட டீசல் தயாரித்துள்ளனர். இதனை லாரிகளுக்கும், சில பெட்ரோல் பங்க்குகளுக்கும், மீன்பிடி படகுகளுக்கும் விற்றுள்ளனர்.
குடோனில் பெரிய தொழிற்சாலை போன்று அமைத்து கலப்பட டீசலை ஆபத்தான முறையில் கையாண்டுள்ளனர். வெளிச்சந்தையைவிட குறைந்த விலைக்கு கலப்பட டீசலை விற்றதால் அதனை பலரும் வாங்கியுள்ளனர் என்றார்.