விஜய்யுடன் கூட்டணியா? அந்த அறிவிப்புக்கு பிறகுதான் ஆதிமுக பேசும் - ஜெயக்குமார் விளக்கம்!
விஜய் கட்சியுடனான கூட்டணியை ஆதிமுக தேர்தல் அறிவித்த பிறகுதான் பேசும் என்று ஜெயக்குமார் என்று தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமார்
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார். கட்சி மாநாட்டில் விஜய் பேசிய பேச்சு தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக எந்த கட்சியுடன் கூட்டணியில் இணையும், விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடுவார் என அக்கட்சியின் நிர்வாகி பேசியுள்ளார்.
மேலும் மாநாட்டில் விஜய் திமுக மற்றும் பாஜகவை மறைமுகமாக விமர்சித்து தனது அரசியல் எதிரியாக அறிவித்திருந்தார். அதே வேளையில் தமிழகத்தின் மற்றொரு பிரதான கட்சியான அதிமுக குறித்து எதுவும் பேசவில்லை.
விளக்கம்
எனவே விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார் என தகவல் வெளியானது. இந்த சூழலில் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவாக ஒரு கருத்தை சொல்லியுள்ளார்.
பாஜக அல்லாத ஒருமித்த கருத்துள்ள கட்சிகள், அதாவது திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம். தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி பற்றி பேசப்படும்.
எந்த கட்சி, அதிமுக தலைமையிலான கூட்டணியை ஏற்றுக் கொள்கிறதோ அவர்கள் எங்களிடம் வரலாம்.இதுவரை நாங்கள் கூட்டணி தொடர்பாக விஜய் உள்ளிட்ட எந்த கட்சிகளுடனும் பேசவில்லை. என்று தெரிவித்துள்ளார்.