போன வாட்டி மிஸ் ஆகிடுச்சு - இம்முறை தூத்துகுடிலேயே கனிமொழியை தோற்கடிப்போம்..! அதிமுக உறுதி
கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.
மழையில் முளைத்த காளான் கமல்
தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டியில் அமுதசுரபி அன்னதானம் மையத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஏமாற்றத்தின் விளிம்பில் ஓபிஎஸ் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார் என சாடினார்.
மேலும், அதிமுகவிற்கு பதிலடி கொடுக்க ஒரு இயக்கம் தமிழகத்தில் இதுவரை தோன்றவில்லை என சுட்டிக்காட்டிய வஅவர், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணியில் இணைய அதிமுகவை விமர்சிக்கிறார் என்று கூறி, அவருடைய கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள அவசியமில்லை என்றார்.
தோற்கடிப்போம்
தொடர்நது பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்பியை எதிர்த்து அதிமுக வெற்றி வேட்பாளர் தான் நிறுத்தப்படுகிறார் என்று நிச்சயமாக கூறி, தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்க வாய்ப்பில்லை என்று கூறி, அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் தூத்துக்குடியை கூட்டணியில் இருந்த பாஜகவிற்கு ஒதுக்கியதால் தோல்வி ஏற்பட்டதாக கூறி, இந்நிலையில் வரும் தேர்தலில் கனிமொழி எம்பியை எதிர்த்து அதிமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று கூறினார்.