தமிழ்நாட்டில் உங்கள் பருப்பு வேகாது - மோடிக்கு ஹிந்தியில் பதிலடி கொடுத்த அதிமுக
கூட்டணியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சிக்க துவங்கிவிட்டது அதிமுக.
பருப்பு வேகாது
அது ஒரு வெளிப்பாடு தான் நேற்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கடுமையான விமர்சனத்தை மோடி மீது வைத்துள்ளார்.
அவர் பேசும் போது, உங்கள் பருப்பு தமிழகத்தில் வேகாது என ஹிந்தியிலேயே கூற, அங்கிருந்த அதிமுகவினர் பலத்த கைதட்டலை வெளிப்படுத்தினார்.
புகழும் மோடி
இந்த கருத்துக்களை இணையத்தில் வைரலாகி வருகின்றது.மறுமுனையில், பல்லடம் பொதுக்குழுவில் பேசிய பிரதமர் மோடி அதிமுகவின் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார்.
இது அதிமுக மீண்டும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சி என அரசியல் வல்லுநர்கள் கூறி வரும் நிலையில், அதிமுகவினர் தொடர்ந்து பாஜகவினரை குறித்தும் பிரதமர் மோடியை குறித்தும் அடுத்தடுத்த விமர்சனங்களை வைக்கும் நிலையில், இந்த கூட்டணி இனி எடுபடாது என்றும் ஒரு தரப்பினர் பேச துவங்கிவிட்டனர்.