அரசிடம் பணமில்லை..அதனால் தான் வாகன ஓட்டிகளிடம் 500, 1000 பிடுங்குகிறார்கள் - சசிகலா!

Tamil nadu V. K. Sasikala Tenkasi
By Swetha Jul 18, 2024 06:07 AM GMT
Report

அரசிடம் பணம் இல்லாததால் வாகன ஓட்டிகளிடம் 500, 1000 பிடுங்குகிறார்கள் என சசிகலா கூறியுள்ளார்.

சசிகலா

தென்காசி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அம்மாவின் வழியில் மக்கள் பயணம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.தென்காசியில் தொடங்கிய இந்த பயணம் இலஞ்சி, சுந்தரபாண்டியபுரம் வழியாக பாவூர்சத்திரம் வந்தடைந்தது.

அரசிடம் பணமில்லை..அதனால் தான் வாகன ஓட்டிகளிடம் 500, 1000 பிடுங்குகிறார்கள் - சசிகலா! | Admk Sasikala Slams Dmk Govt At Tenkasi Speech

மாலையில் பாவூர்சத்திரம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரவில் வந்து அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நேரமின்மை காரணமாக அங்கு கூடி நின்றவர்களிடம் எதுவும் பேசவில்லை.

பத்திரிகை சுதந்திரத்தை மிதித்துள்ளது திமுக - சவுக்கு சங்கர் கைதுக்கு சசிகலா கண்டனம்!

பத்திரிகை சுதந்திரத்தை மிதித்துள்ளது திமுக - சவுக்கு சங்கர் கைதுக்கு சசிகலா கண்டனம்!

பணமில்லை..

முன்னனதாக தென்காசியில் உரையாற்றிய அவர், “தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. அரசிடம் பணம் இல்லாததால் மக்களிடம் வரியை வசூலிக்கின்றனர். அரசிடம் பணம் இல்லாததால் பைக்கில் செல்பவர்களிடம் 500 ரூபாய், 1000 ரூபாய் கொடுனு சொல்லி தொந்தரவு செய்கிறார்கள்.

அரசிடம் பணமில்லை..அதனால் தான் வாகன ஓட்டிகளிடம் 500, 1000 பிடுங்குகிறார்கள் - சசிகலா! | Admk Sasikala Slams Dmk Govt At Tenkasi Speech

இதெல்லாம் ஜெயலலிதா இருந்தபோது நடக்கவில்லை. ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை. பல இடங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது.

இந்த அரசிடம் திட்டமிடல் சரியாக இல்லை. குளம், குட்டைகளை தூர்வாரவில்லை. ஜெயலலிதா எந்த வெளிநாடும் போனது கிடையாது. ஆனால் இன்றைய முதல்வர் பல முறை வெளிநாடு செல்கிறார். நீங்க யார் கிட்ட வேண்டுமானாலும் ஏமாற்றலாம்.. ஆனால் என்கிட்ட முடியாது” இவ்வாறு கூறியுள்ளார்.