இபிஎஸ் மாஸ்டர் பிளான் - டெக்னாலஜியை பயன்படுத்தும் அதிமுக - வாக்கு சேகரிக்க வந்த ரோபோ!
நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதை கட்சிகள் வழக்கமாக கொண்டுள்ளன.
தேர்தல் பிரச்சாரம்
வரும் மக்களவை தேர்தல் அடுத்த வரும் தமிழகத்தில் நாட்டில் முதல் கட்டமாக நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் கட்சி சின்னம் பொரிக்கும் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என பலரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொளுத்தும் வெயிலையும் கண்டு கொள்ளாமல், தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது.
அதிமுக ரோபோட்
பல வித்தியாசமான முறைகளை தேர்தல் பிரச்சாரங்களின் போது, கட்சிகள் கையாளுவது வழக்கமான ஒன்றே. சினிமா பிரபலங்கள், தலைவர்களை போல வேடமிடுபவர்கள் என பல வகையிலும் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெறும்.
அப்படி தான் தற்போது நூதன முறை ஒன்றை கையாண்டுள்ளது அதிமுக. தருமபுரியில் ரோபோ மூலம் அதிமுக சார்பில் அதிமுக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கப்பட்டது.
அந்த ரோபோவானது கையில் லேப்டாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது. லேப்டாப்பில் கேமரா ஆன் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோபோ முன் நின்று மக்கள் செல்பி எடுத்துக் கொள்ளலாம் இரட்டை விரல் காட்டி செல்பி எடுத்துக் கொள்ளலாம். அதுபோன்று செட் செய்யப்பட்டுள்ளது.