கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது - சசிகலா சுற்றுப்பயணம்..ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்!
அதிமுகவில் சசிகலாவை விமர்சிக்கும் தலைவர்களின் போக்கு நீடித்து கொண்டே வருகிறது.
சசிகலா
கட்சியில் பொதுச்செயலாளராக இருந்து எடப்பாடி பழனிசாமியை மாநிலத்தின் முதல்வராக நியமித்து,பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற சசிகலா, திரும்பி வந்த போது, அவருக்கே கட்சியில் இடமில்லாமல் போனது.
ஆட்சி, அதிகாரம், கட்சி என அனைத்துமே எடப்பாடி பழனிசாமி வசம் வந்துவிட்டது. ஓபிஎஸ் வெளியேறி தனியாக போராடி வருகிறார். 7 வருடமாக தனிக்கட்சியுடன் பயணிக்கிறார் டிடிவி தினகரன். கட்சி உடைந்து விட்டதாக பலரும் கூறிய நிலையில், அதனை அதிமுகவினர் ஏற்காமலே இருந்தார்கள். ஆனால், சில காலத்தில் தற்போது நிலை சற்று தற்போதைய அதிமுக தலைமைக்கு சிக்கலாகி இருக்கிறது.
என்னுடைய Entry துவங்கிவிட்டது ...தானும் கெட்டு கட்சியையும் கெடுக்கக்கூடாது !! தொண்டர்களை குஷியாக்கிய சசிகலா
காரணம், தொடர் தோல்விகள். ஒருங்கிணைப்பு குறித்து பேச்சுக்கள் எழுந்துவிட்டது. அண்மையில் பேசிய சசிகலா அதிரடியாக இது என்னோட entry, அதிமுகவை மீட்டெடுக்கப்போகிறேன் என்று பேசினார். அதன் காரணமாக, மீண்டும் துவங்கி விட்டது அதிமுக தலைவர்களின் target.
கருவாடு
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சசிகலாவை பற்றி பேசி பரபரப்பை கிளம்பிவிட்டார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, சசிகலா மேற்கொள்ளப்போகும் சுற்றுப்பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது என்றும், இது அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் என்றார்.
மேலும், உள்ளடி வேலைகளின் காரணமாக அதிமுக ஆட்சியை இழந்ததாக குற்றம்சாட்டியவர், 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா என்றும் விமர்சனம் செய்தார். மேலும், அதிமுகவினர் தற்போது சுதந்திர காற்றை சுவாசிப்பதாக கூறி, சசிகளவிற்கு கட்சியில் இடமில்லை என கூறினார்.