அங்கே மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. இங்கே ஆர்ப்பாட்டம் - சலசலப்பில் அதிமுக
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றிற்கு எதிராக திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அறிவித்தப்படி இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செயலாளர்கள் கூட்டம்
அதே வேளையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனம், போட்டி பொதுக்குழு நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.