அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - 15 மாவட்டங்களில் ஒத்திவைப்பு!
திமுக அரசை கண்டித்து நடைபெற இருந்த அதிமுக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றிற்கு எதிராக திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில்
இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இருப்பினும் தொடர் மழை காரணமாக இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஒத்திவைக்ககப்பட்டு,
வருகின்ற 21 ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டமிட்டபடி அனைத்து ஒன்றியங்களிலும் நாளையும், ஒத்திவைக்கப்பட்ட பேரூராட்சிகளில் வருகிற 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.