பரபரக்கும் தொகுதி பங்கீடு - பாமக - தேமுதிகவின் கோரிக்கையை நிராகரித்த அதிமுக..?

Tamil nadu ADMK PMK Edappadi K. Palaniswami DMDK
By Karthick Mar 02, 2024 06:53 AM GMT
Report

வரும் நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளது.

அதிமுக கூட்டணி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, புதிய கூட்டணியை அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றது.

admk-pmk-dmdk-alliance-talks-stalled

தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவின் கூட்டணிக்கு சென்ற நிலையில், பாமக மற்றும் தேமுதிக ஆகியோருடனான கூட்டணியை உறுதி செய்ய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மறுக்கும் அதிமுக..

பாமக 10 மக்களவை தொகுதியையும், தேமுதிக 7 மக்களவை தொகுதியையும் கேட்பதாகவும், இரு கட்சிகளுமே அதிமுகவிடம் ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்பதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணி என்றால் நண்பர்கள் - வெளியேறினால் எதிரி தான் - செல்லூர் ராஜு

கூட்டணி என்றால் நண்பர்கள் - வெளியேறினால் எதிரி தான் - செல்லூர் ராஜு

இதில், பாமகவிற்கு 7 மக்களவை தொகுதியும், தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதியையும் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இரு கட்சிகளின் மாநிலங்களவை கோரிக்கையையும் அதிமுக நிராகரித்துள்ளதாம்.

admk-pmk-dmdk-alliance-talks-stalled

இன்னும் கூட்டணி உறுதிப்படுத்தப்பட நிலையில், கிட்டத்தட்ட இந்த பேச்சுவார்த்தைகள் இறுதியாகும் என்றும் கூறப்படுகிறது.