முடக்கப்படுகிறதா இரட்டை இலை சின்னம்..? அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சி
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது அதிமுக வட்டாரத்திற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இரட்டை இலை சின்னம்
ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் போன்றவற்றை கட்சியின் பொறுப்புகளை முழுவதுமாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்துள்ள நிலையிலும், தொடர்ந்து கட்சியை மீட்டுப்பதாக ஓபிஎஸ் பல இடங்களிலும் பேசி வருகின்றார்.
மேலும், அண்மையில் தங்கள் அணி தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட போவதாக ஆணித்தரமாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் ஓபிஎஸ் குறித்து கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.]
முடக்கமா..?
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என உறுதிபட தெரிவித்து, உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்த பின்னர் எப்படி முடக்க முடியும்? என்று வினவி, ஓபிஎஸ் ஆசை நிராசையாக தான் முடியும் என்றார்.
அதிமுக தேர்தல் கூட்டணியை இன்னும் முடிவுசெய்யாத நிலையிலும், தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தங்கள் கூட்டணி வலுப்பெறும் என்ற நம்பிக்கையில் என அதிமுகவினர் நம்பிக்கையில் உள்ளனர்.