தமிழக அரசின் காவிரி பிரச்சனை அனைத்து கட்சி கூட்டம் - அதிரடி முடிவெடுத்த எடப்பாடியார்?
நாளை தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் காவிரி விவகாரத்தில் நடைபெறவுள்ளது.
காவிரி விவகாரம்
கர்நாடக மாநிலத்தில், நேற்று அனைத்து கட்சி கூட்டத்தில், மாநிலத்தில் தண்ணீர் குறைவான அளவிலேயே பெய்துள்ள காரணத்தால், தமிழகத்திற்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே தர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தமிழகத்தில் பெறும் கண்டனங்களை பெற்றுள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன், கர்நாடக அரசின் முடிவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
முடிவு
தமிழகத்தில் உடனடியாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என் வலியுறுதல்கள் அதிகமாகின. இந்நிலையில், தான் நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக பங்கேற்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கட்சியில் சார்பில் 2 பிரதிநிதிகளை அனுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.