கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு!
அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்தனர்.
கிட்னிகள் ஜாக்கிரதை
தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.
மேலும், 7 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கிட்னிகள் ஜாக்கிரதை என்ற பேட்ஜ் அணிந்து வந்திருந்தது பேசுபொருளாக மாறியது.
சட்டப்பேரவையில் சலசலப்பு
நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தை முன்வைத்து இந்த பேட்ஜை அதிமுக எம்.எல்.ஏக்கள் அணிந்திருந்தனர். மணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான
பிரபல தனியார் மருத்துவமனையில் ஏழைகளிடம் பொய்சொல்லி அவர்களது கிட்னி முறைகேடாக எடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

குருந்தூர் மலை குறித்து போலி வரலாற்றுப் புனைவு : தொல்லியல் திணைக்களத்தை சாடும் ரவிகரன் எம்.பி IBC Tamil
