சரியான கூட்டணி இல்லை..தோல்விக்கு காரணமே அது தான்!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள்
தேசிய அளவில் ஒரு கட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற கட்சியாக இருந்த அதிமுக தற்போது சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. தொடர்ந்து தேர்தல் தோல்விகள் அக்கட்சியின் தொண்டர்களை கலைப்படைய செய்துள்ளது.
தவறு எங்கே நடந்துள்ளது என்ற யோசனையில் இறங்கியுள்ளது அதிமுக. அதிமுகவின் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவும் சில இடங்களில் அதிமுக பழைய பலத்துடன் இருப்பது தான் தமிழகத்திற்கு நல்லது என்றும் அப்படி இல்லையென்றால் மற்ற கட்சிகளின் வளர்ச்சி அதிகரித்து விடும் என பாஜகவை மறைமுக சுட்டிக்காட்டி பேசியிருந்தது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் என்பது அதிமுக கூட்டணிக்கு பெரிய பாடமாக அமைந்துள்ளது. இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு 2 வருடமே உள்ளது. அதனை குறிவைத்து இப்போதிலிருந்தே கட்சியையும், தொண்டர்களையும் தயார் செய்தால் தான், கட்சியின் தலைவர்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
கூட்டணி இல்லை
சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் விவாதிகப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த தேர்தலில் வலுவான கூட்டணி இல்லாதே தோல்விக்கு காரணமாக, சிவகங்கை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் நடைபெற்று முடிந்த தேர்தலில் தேமுதிக, புதிய தமிழகம், SDPI போன்ற கட்சிகள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.