நள்ளிரவில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் சரமாரியாக வெட்டிக் கொலை - கொடூரம்!

Tamil nadu Attempted Murder ADMK Death
By Vinothini Aug 16, 2023 09:25 AM GMT
Report

முன்னாள் அதிமுக கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக உறுப்பினர்

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் முன்னாள் அதிமுக உறுப்பினரும், அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜி.எஸ்.பிரபு, இவருக்கு 38 வயது. சமூக ஆர்வலரான இவர் பிளக்ஸ் தயாரிக்கும் தொழில் நடத்தி வந்தார். இவர் மைக்கேல்பட்டி பாம்பாளம்மன் கோயில் அருகே வசித்து வந்தார்.

admk-member-killed-by-unkown-gang

இவர் நேற்று இரவு தனது பணிகளை முடித்துவிட்டு பழமார் நேரி சாலையில் உள்ள அவரது சகோதரர் வீட்டின் அருகே உள்ள ஒரு கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இரவு. சுமார் 10.30 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பிரபுவின் கழுத்து மற்றும் தலையில் சரமாரியாக வெட்டினர், இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

இந்நிலையில், திருக்காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் விசாரணையில்,

admk-member-killed-by-unkown-gang

பிரபுவுக்கும் அதே பகுதியிலுள்ள இடம் தொடர்பாகவும் மற்றும் அதே பகுதியில் உள்ள மற்றொருவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுவதால் இது தொடர்பாக சிலரிடம், ரகசியமான இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.