சர்வேயரை செருப்பால் தாக்கிய முன்னாள் அதிமுக கவுன்சிலர் - பரபரப்பு சம்பவம்!
முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஒருவர் சர்வேயரை செருப்பால் தாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நில பிரச்சனை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காடாம்புலியூர் பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் சீதாபதி என்பவருக்கும் ராஜகுமாரி என்பவருக்கும் நில பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய நிலத்தை அளவீடு செய்வதற்காக நில அளவையர் மகேஸ்வரன் என்பர் வந்துள்ளார். அப்போது சீதாபதிக்கும் மகேஸ்வரனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
செருப்பால் தாக்குதல்
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நில அளவையர் முதலில் செருப்பை கழற்றி சீதாபதியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. பதிலுக்கு சீதாபதி தனது செருப்பை கழற்றி நில அளவையரை தாக்கியுள்ளார். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.