7'இல் டெபாசிட் காலி...9'இல் 3-ஆம் இடம், 3'இல் 4-ஆம் இடம்!! அதிமுகவின் பரிதாப நிலை!!
தமிழகத்தில் 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.
அதிமுக
தமிழகத்தின் மிக முக்கிய கட்சியாக இருக்கும் அதிமுக, 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலுக்கு பிறகு பெரிய வெற்றியை பதிவு செய்திடவில்லை. கட்சி உடைந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதல் முறை சந்தித்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், அக்கட்சி 40 தொகுதிகளையும் இழந்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், புதிய கூட்டணி தலைமையில் களம் கண்டு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது அதிமுக. வெளியான தேர்தல் முடிவுகளில் அக்கட்சி 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
பெரும் தோல்வி
தென்சேன்னை,கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழக மக்களவை தொகுதிகளிலும் புதுவையிலும் அக்கட்சி டெபாசிட் இழந்துள்ளது.
அதே போல, 9 தொகுதிகளில் 3-ஆம் இடமும், 3 தொகுதிகளில் 4-ஆம் இடத்திற்கும் அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களுக்கே பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.
ஆனால், நேற்று தேர்தல் முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி 2026-ஆம் ஆண்டில் வெற்றி காண்போம் என குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியே என்றாலும், அதிமுக வாக்கு எண்ணிக்கை சதவீதத்தில் 2-வது பெரிய கட்சியாகவே உள்ளது. அக்கட்சி தமிழகத்தில் 20.46%,புதுச்சேரியில் 3.11% வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.