Breaking News - ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை !! 4-வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக
வெளிவரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.
அதிமுக
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்த அதிமுக 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய புதிய கூட்டணியை அமைத்து அக்கட்சி தேர்தலை சந்தித்துள்ளது. நேரடியாக அதிமுக 33 இடங்களில் போட்டியிட்டுள்ளது.
Breaking News : திருச்சியில் கடும் போட்டி கொடுக்கும் நா.த.க - சீமான் அதிரடி பயனளித்ததா?? நிலவரம் என்ன!
4-வது இடத்தில்
தற்போது வெளியாகி வரும் முன்னிலை விவரங்களில் ஒரு இடத்தில் கூட அதிமுக முன்னிலை பெறவில்லை. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட விருதுநகர் மக்களவை வேட்பாளர் தேமுதிகவின் விஜயபிரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வித்தியாசத்தில் உள்ளார்.
மற்றபடி கட்சியின் வேட்பாளர்கள் அனைவருமே பின்தங்கியுள்ளனர். இதில் பெரிய பின்னடைவாக திருநெல்வேலி தொகுதியில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அதிமுக.