காய் நகர்த்தும் இபிஎஸ்..டெல்லியில் அதிமுகவின் தலைவர்கள்...அமித் ஷாவுடன் மீட்டிங்..!

Amit Shah ADMK BJP K. Annamalai Edappadi K. Palaniswami
By Karthick Sep 22, 2023 01:30 PM GMT
Report

அதிமுகவின் மூத்த தலைவர்கள் தற்போது டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

முறிந்த கூட்டணி

அண்மையில் அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார், பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறியது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. பெரியார், அண்ணா குறித்து அண்ணாமலையின் விமர்சனமே இதற்கு காரணமாக கூறப்படும் நிலையில், கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் தான் கூறுவார்கள் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

admk-leaders-in-delli-to-meet-amit-shah

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவிற்கு பாஜகவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறி, அதிமுகவின் தலைவர்களுக்கும் தனக்கும் பிரச்சனை இருக்கலாம் என தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் இந்த கருத்துக்கள் குறித்து அதிமுக தரப்பில் இருந்து தற்போது வரை எந்த பதிலடியும் அளிக்கப்படவில்லை.

மத்தியில் மோடிக்கு ஓகே...இங்கு இபிஎஸ்'ன்னு நோ...முரண்படும் அண்ணாமலை!!

மத்தியில் மோடிக்கு ஓகே...இங்கு இபிஎஸ்'ன்னு நோ...முரண்படும் அண்ணாமலை!!

டெல்லியில் மூத்த தலைவர்கள்

இந்நிலையில் தான் தற்போது அதிமுகவின் மூத்த தலைவர்கள் 5 பேர் டெல்லி சென்றுள்ளனர். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, சிவி சண்முகம் ஆகியோர் கொச்சி வழியாக டெல்லி சென்றுள்ளதாகவும், அவர்கள் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

admk-leaders-in-delli-to-meet-amit-shah

வார்த்தை மோதல்கள் இருகட்சிகளுக்குள்ளும் அதிகரித்துள்ள நிலையில், கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று நம்பப்படுகிறது. இதில் முக்கியமாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்கவில்லை என தெரிகிறது.