மத்தியில் மோடிக்கு ஓகே...இங்கு இபிஎஸ்'ன்னு நோ...முரண்படும் அண்ணாமலை!!
மத்தியில் மோடி தான் வர வேண்டும் என்ற செல்லூர் ராஜுவின் கருத்தில் ஒன்றுபடும் அண்ணாமலை ஆனால் தமிழகத்தில் எடப்பாடி தான் முதல்வர் என கூறமறுப்பது ஏன் என்ற கேள்வி தற்போது அதிகளலவில் எழுந்துள்ளது.
எங்கே முரண்படுகிறது பாஜக..?
மத்தியில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமராக மோடி தான் வரவேண்டும் என்ற குறிக்கோளில் என் மண் என் மக்கள் பயணத்தை மேற்கொண்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அண்மையில் பேரறிஞர் அண்ணா குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து அக்கட்சியுடன் கூட்டணி இல்லை என அதிரடியாக அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்தார்.
இது தமிழக அரசியல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து இக்கட்சி உறுப்பினர்களும் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மத்தியில் மோடி என்றும் தமிழகத்தில் இபிஎஸ் தான் அடுத்து முதல்வராக வரவேண்டும் என பாஜக கூறவேண்டுமென தெரிவித்திருந்தார்.
வெளிப்படும் அண்ணாமலையின் நிலைப்பாடு..?
இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கூட்டணி குறித்து கட்சியின் தேசிய தலைவர்களே கருத்து தெரிவிக்க முடியும் என சுட்டிக்காட்டி, ஆனால் மோடி தான் அடுத்த பிரதமராக வரவேண்டும் என நினைப்பவர்கள் தங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என தெரிவித்தார்.
அதே நேரத்தில், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தான் அடுத்த முதல்வராக வரவேண்டும் என்று தான் கூறமுடியாது என தெரிவித்து மற்ற கருத்துக்களை தெரிவித்தார். இதில் அண்ணாமலையின் நிலைப்பாடு வெளிப்படையாக தெரிகின்றது.
கட்சியை வளர்ப்பதே நோக்கம்
மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்திட அதிமுக போன்ற கட்சிகளின் தேவை அவசியம் முக்கியமானது என்பதை தெளிவாக புரிந்து கொண்டுள்ள அண்ணாமலை, அதே நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரையில் பாஜகவை வளர்ப்பதில் தீவிரம் காட்டுகிறார்.
அது அவரின் இன்றைய பேச்சிலும் வெளிப்பட்டது. கூட்டணி என்றாலும், தங்கள் கட்சியை மாநிலத்தில் காலூன்ற தேவையான முயற்சிகளில் அக்கட்சி மற்றும் அண்ணாமலை மும்முரம் காட்டி வரும் நிலையில், தான் மற்றொரு கட்சியின் தலைவர் முதல்வராக வரவேண்டும் என்ற கருத்தை வரும்கால அரசியலுக்கு பிரச்சனை இருக்கக்கூடாது என்பதற்காக அண்ணாமலை தெளிவாக புறந்தள்ளி இருக்கின்றார்.
அரசியலே ஆனாலும், கூட்டணி தான் என்றாலும், ஒவ்வொரு கட்சியும் தங்களை வளர்க்கவே, மக்களிடம் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறவே முயலும் என்ற கூற்று தான் இன்று அண்ணாமலையின் பேச்சில் வெளிப்பட்டுள்ளது. இதில் தவறில்லை என்றே கூறலாம்.