கிரிக்கெட்டில் இலங்கை தோற்கடிக்கப்பட்டதால் தான் மீனவர்கள் மீது தாக்குதல் - ஜெயக்குமார் பேச்சு!

Tamil nadu Sri Lanka D. Jayakumar
By Swetha Aug 03, 2024 11:00 AM GMT
Report

கிரிக்கெட்டில் இலங்கை தோற்கடிக்கப்பட்டதால் மீனவர்கள் மீது தாக்குதல் நடந்தது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஜெயக்குமார் பேச்சு

விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கிரிக்கெட்டில் இலங்கை தோற்கடிக்கப்பட்டதால் தான் மீனவர்கள் மீது தாக்குதல் - ஜெயக்குமார் பேச்சு! | Admk Jayakumar Talks About Fishermans In Press Met

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கிரிக்கெட் போட்டியில் தோற்கடிக்கப்பட்ட ஒரே காரணத்தால் இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

மீனவர் படுகொலை; பாஜக, திமுக அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம் - சீமான் கண்டனம்

மீனவர் படுகொலை; பாஜக, திமுக அரசுகளின் கையாலாகாத்தனமே காரணம் - சீமான் கண்டனம்

மீனவர்கள் தாக்குதல்

ஒரு ஆண்டில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மீனவர்களுக்கு பாதுகாப்பே இல்லை. மீனவர்களின் மீதான தாக்குதலை தடுப்பதற்கு திமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிரிக்கெட்டில் இலங்கை தோற்கடிக்கப்பட்டதால் தான் மீனவர்கள் மீது தாக்குதல் - ஜெயக்குமார் பேச்சு! | Admk Jayakumar Talks About Fishermans In Press Met

கடிதம் எழுதுவதோடு முதலமைச்சரின் பணி நின்றுவிடுகிறது. இலங்கை தாக்குதல் மற்றும் மீனவப் பிரச்சினையை மத்திய, மாநில அரசுகள் வாய்மூடி வேடிக்கை பார்க்கிறது. மின்வெட்டு, மின்சார விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் பல தொழிற்சாலைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இனவெறியோடு இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுகின்றனர். உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவர்கள் வெளியூர் சென்று எதையோ பிடிக்க ஆசைப்பட்ட கதை தான் இது. அதுபோல முதலமைச்சருக்கு பிரதமராவதற்கான ஆசைக்கூட இருக்கா..” என கேலியாக கூறினார்.