அதிமுக போராட்டம் - 62 பேரின் ஆவி மு.க.ஸ்டாலினிடம் கேள்வி கேட்கும்!! ஜெயக்குமார்
அதிமுக தரப்பில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
ஜெயக்குமார் விமர்சனம்
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது பேசியது வருமாறு,
3 ஆண்டுகளாக திமுக அரசு பொறுப்பு ஏற்றத்தில் ரோந்து கள்ள சாராயம், போதை போன்றவை தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நடமாடுகிறது. இதில் பலர் கண் பார்வை இழந்திருக்கிறார்கள்.
மரக்காணத்தில் இதே போல கள்ளச்சாராய மரணம் ஏற்பட்ட பொது இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று முதல்வர் ஸ்டாலின் வாய்சவடால் விட்டார். ஆனாலும், கள்ளச்சாராயம் எளிதாக கிடைக்கிறது.
ஆவி சும்மாவிடாது
எதிர்க்கட்சித் தலைவர் மெத்தனாலிற்கான மருந்து இல்லை என சொன்ன பிறகு தான் அவசர அவசரமாக மும்பை சென்று மருந்தினை வாங்கி வந்தார்கள். விஷச்சாராய வழக்கை மடியில் கனமில்லை என்றால் சிபிஐக்கு மாற்றலாமே? சிபிஐ'க்கு மாற்றினால் பலர் மாட்டுவார்கள்.
ஒரு நபர் ஆணையம் என்பது வெறும் கண் துடைப்பு. சட்டசபையில் தானே மக்கள் பிரச்சனையை விவாதிக்க முடியும். இது குறித்து விவாதிக்க சட்டமன்றத்தில் அனுமதி இல்லை.
தொடர்ந்து பேசியவர், அமைச்சர் மா.சுப்ரமணியனை விமர்சிக்கும் வகையில், 62 பேரின் ஆவிகள் முதல்வர் ஸ்டாலினையும் அமைச்சர் மா.சு'வையும் சும்மா விடாது. நைட்'டில் வந்து அவர்களிடம் கேள்வி கேட்கும்.