மாட்டு கோமியம் குடிப்பது குறித்த சர்ச்சை - ஒரே வார்த்தையில் ஜெயக்குமார் நச் பதில்!
மாட்டு கோமியம் குடிப்பது குறித்த சர்ச்சைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
மாட்டு கோமியம்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஒருமுறை எனது தந்தை ஜுரம் அடிப்பதால் மருத்துவரிடம் செல்லலாமா என ஒரு சந்நியாசியிடம் கேட்டார். அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டுக் கோமியம் குடி எனக் கூறினாராம்.
உடனடியாக அவர் கோமியத்தைப் பருகவும் அடுத்த 15 நிமிடத்தில் ஜூரம் குணமாகி விட்டது. காய்ச்சல், வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்குக் கோமியம் சிறந்த மருந்து எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை ஐஐடி இயக்குநரின் பேச்சுக்கு அரசியல் கட்சி பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.இதற்கு ஆதரவு தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்து இருந்தார்.
ஜெயக்குமார் பதில்
அதன்பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழிசை , "மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க. ஆனால் கோமியத்தை குடிக்க மாட்டீங்களா?விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து நிரூபிக்கப்பட்ட மருந்தாக மாட்டுக் கோமியம் குடிக்க வேண்டும் என்று என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாட்டு கோமியம் குடிப்பது குறித்த சர்ச்சைக்குப் பதில் அளித்துள்ளார்.இது குறித்து அவர் பேசியிருப்பதாவது, கோமியத்தைக் குடிக்க வேண்டும் என்றால் நீங்கள் குடிக்கலாம். அதற்காக அதை மற்றவர்களுடன் பரப்பிட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.