மக்கள் அவதி.. விடியா திமுகவின் கதை முடியப் போகிறது - ஜெயக்குமார் காட்டம்!
திமுக கட்சி குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
ஜெயக்குமார்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “69% இடஒதுக்கீடு முறை பாதிக்கப்படக்கூடாது என்று அன்றைய பிரதமரை சந்திக்க அனைத்து கட்சித் தலைவர்களையும் ஜெயலலிதா அழைத்துச் சென்றார். அதனால் தான் 69% இடஒதுக்கீடு உறுதியானது.
ஆனால் இன்று சமூக நீதி பற்றி பேசும் முதல்வர் ஸ்டாலின், என்ன சாதித்தார்? தமிழகத்தில் விடியா ஆட்சியில் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.
பேட்டி
இதனை தொடர்ந்து, "2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு விடியா திமுகவின் கதை முடியப் போகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி பல கட்சிகள் அதிமுக நோக்கிவரும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமையும்.
போதிய அளவு தண்ணீர் இருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க திமுக அரசுக்கு மனமில்லை. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி மேலூரில் விவசாயிகள் போராடிவருகின்றனர்" என்று பேசியுள்ளார்.